GOSSIPS
“சந்திரமுகியாக உருவெடுத்த பேய் நடிகை”.. இவுங்களுக்கா இந்த சோதனை..
எப்பொழுதும் பேய் படங்கள் தான் தனக்கு வாய்த்து தொலைக்கிறது என காண்டு பறவையாக சுற்றுகிறாராம் அந்த பேய் நடிகை.
சமீபத்தில் பேய் நடிகை நடித்து வெளிவந்த அந்த பேய் பட டீசரை பார்த்து வெறுப்பாகி உள்ளாராம் அந்த பேய் நடிகை. ஏனென்றால் அந்த டீசரை பார்த்து அவரின் நண்பர்கள் அவரை கேலி செய்து சிரிக்கிறார்களாம்.
“உன்னை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது, பயம் வரவில்லை” என சுற்றத்தார் சுளீரென்று சம்மர் வெய்யில் போல் மூஞ்சில் அடித்தவாறு சிரிக்கிறார்களாம். இதனால் காண்டாக இருந்த அவர்,
அந்த டீசரில் தான் நடித்த சிறப்பான ஒரு காட்சி கூட டீசரில் வைக்கவில்லை என அத்திரைப்படத்தின் இயக்குனர் மேல் மேலும் காண்டாகி சந்திரமுகியாக அலைகிறாராம்.
பல வருடங்களாக சினிமா துறையில் இருந்தும் தனக்கு சிறப்பான வேடங்கள் அமையவில்லை எனவும் அப்படியே அமைந்தாலும் தனக்கு எங்கு சுற்றிலும் பேய் பட வாய்ப்புகள் தான் வந்து கொண்டிருக்கிறது எனவும் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளாராம்.
ஆனால் தனது விடாமுயற்சியின் மீதான நம்பிக்கையை விட்டுக்கொடுக்காத அந்த பேய் நடிகை, “படம் வரட்டும், நான் வேற லெவல்ல நடிச்சிருக்கேன், உங்களுக்கு எல்லாம் இருக்கு” என தனது நண்பர்களுக்கு சவால் விட்டுள்ளாராம் ஆதலால் மிகவும் ஆர்வமாக தனது திரைப்படத்தின் ரீலிஸிற்கு வெயிட் செய்து கொண்டிருக்கிறாராம்.
ஆதலால் அவரது நண்பர்களும் ஓவராக கலாய்த்துவிட்டோமோ என நினைக்கிறார்களாம். எனினும் “நான் சினிமா துறையில் சாதித்தே காட்டுவேன்” என்று விடாபிடியான முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை நடை போட்டு கோடம்பாக்கம் ரோட்டில் நடந்து சென்றாராம் அந்த பேய் நடிகை என கோலிவுட் வட்டாரங்களில் பலவாறு கிசுகிசுக்கப்படுகிறதாம்.