Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நான் இப்போ ஒரு House Wife… உற்சாகத்தில் யாஷிகா ஆனந்த்

CINEMA

நான் இப்போ ஒரு House Wife… உற்சாகத்தில் யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் குடும்பப் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்தது குறித்து உற்சாகமாக பேசினார்.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான “கடமையை செய்” திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

“கடமையை செய்” திரைப்படத்தை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். அருண் ராஜ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் என்டெர்டெயின்மென்ட் சார்பாக ரமேஷ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, Stooper என்னும் மூளை கோளாறு ஏற்பட்ட நபராக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த அவருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

எஸ் ஜே சூர்யா ஒரு சிறந்த நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். “கடமையை செய்” திரைப்படத்திலும் தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என தெரிய வருகிறது.

“கடமையை செய்” திரைப்படம் வித்தியாசமான கதைக்களமுடைய திரைப்படமாக அறியப்படுவதால் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் “கடமையை செய்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய யாஷிகா ஆனந்த் “நான் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறேன். நானே சின்ன பெண் தான். ஆனால் நான் ஒரு தாயாக நடித்திருக்கிறேன்” என சிரித்துக்கொண்டே கூறினார்.

மேலும் பேசிய அவர் “எனக்கு ஒரு பிம்பம் இருக்கிறது. அதாவது நான் ஒரு கிளாமர் Doll என்று. ஆனால் இந்த திரைப்படத்தில் நான் ஒரு House wife. இத்திரைப்படத்தில் எனது மொத்த உழைப்பையும் கொட்டியிருக்கிறேன். நான் இதற்கு முன் நடித்த படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்தேன். ஆனால் என்னை இந்த படத்தில் இந்த அளவு உற்சாகப்படுத்தி நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு நன்றி” என நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top