CINEMA
ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த “யானை” கிளிம்ப்ஸ்…
ரத்தம் தெறிக்க தெறிக்க வெறிகொண்டு வெளியான “யானை” கிளிம்ப்ஸ் வீடியோ.
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “யானை”. இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“யானை” திரைப்படம் சென்ற ஜூன் மாதமே வெளியாக இருந்த நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் அபார வெற்றியால் தள்ளிப் போனது. அதன் படி வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி வெளிவர உள்ளது.
ஹரி திரைப்படங்களை பொறுத்தவரை அனைத்தும் நேட்டிவிட்டி சம்பந்தமாகவும் உறவுக்குள் நடக்கும் பாசப் போராட்டங்களை மையமாக கொண்டும் கதையம்சம் கொண்டிருக்கும். மேலும் இவரது திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகளும், சென்டிமண்ட் காட்சிகளும் ரசிக்கும் படியாக இருக்கும்.
அதே போல் திரைக்கதையும் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக செல்லும். காமெடி, ஆக்சன், காதல், சென்டிமன்ட் என பக்கா கமெர்சியல் அம்சம் கொண்ட பல தரப்பட்ட ரசிகர்களை கவரும் விதமாகவே ஹரியின் திரைப்படங்கள் அமையும்.
இவர் “தமிழ்”, “சாமி”, “கோவில்:, “அருள்”, “அய்யா”, “அறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சேவல்”, “சிங்கம்”, “வேங்கை”, “சிங்கம் 2”, “பூஜை”, “சிங்கம் 3” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களை தந்துள்ளார். ஹரி திரைப்படங்களுக்கு என்றே தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் தற்போது “யானை” திரைப்படம் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் பிளாக் திரைப்படமாக அமைய உள்ளது என்ற தகவலை சொல்லும் விதமாக அத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் ஒன்று வெளிவந்துள்ளது.
அதில் அருண் விஜய் மட்டுமல்லாது அம்மு அபிராமி, யோகி பாபு உட்பட பலரும் வெறித்தனமாக அரிவாளோடு திரிகின்றனர். இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ…
