CINEMA
“அனிருத்தை தான் திருமணம் செய்வேன்”.. பிரபல பாடகி பேட்டி
அனிருத்தை இந்த காரணத்திற்காக தான் திருமணம் செய்வேன் என பிரபல பாடகி ஒருவர் கூறியுள்ளார்.
அனிருத் சமீபத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் வெறித்தனமாக இசையமைத்த “விக்ரம்” திரைப்படம் வெளிவந்து வேற லெவல் கலெக்சனை அள்ளிக் கொண்டு இருக்கிறது. “விக்ரம்” ஆல்பமும் தரமான பாடல்களாக அமைந்துள்ளது.
மேலும் அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் “ஜவான்” திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல பாடகி ஜோனிடா காந்தி ஒரு பிரபல யூட்யூப் சேன்னல் நடத்திய விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில Rapid fire கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது “Kill, Marry, Kiss” என கேட்டு “அனிருத், சூர்யா, ரன்வீர்” என Options கொடுக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜோனிடா “நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என கூறிவிட்டு “இந்த மூன்று பேரில் யாருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை?” என கேட்டார். அதற்கு தொகுப்பாளர் “அனிருத்” என கூற உடனே “அந்த காரணத்திற்காக வேண்டும் என்றால் அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன்” என கூறினார்.
ஜோனிடா காந்தி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பெங்காலி என பல இந்திய மொழி திரைப்படங்களில் இடம்பேற்ற பல பாடல்களில் பிண்ணனி பாடியுள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட “பீஸ்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அரபி குத்து” பாடலை இவர் தான் பாடினார். மேலும் “டான்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பார்ட்டி” பாடலும் இவர் தான் பாடினார். அதே போல் தமிழில் ஹிட் அடித்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.