CINEMA
“ஜெயில் படம் பார்த்துட்டு, ஜெயிலர் பாருங்க”… பங்கமாய் விளம்பரப்படுத்திய ஓடிடி நிறுவனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு இந்த படத்தை பாருங்க என “விக்ரம்” பட பாணியில் ஒரு ஓடிடி நிறுவனம் பங்கமாய் விளம்பரப்படுத்தி உள்ளது.
“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து “தலைவர் 169” திரைப்படத்தின் Pre-production பணிகள் தொடங்கின. திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்தது.
“தலைவர் 169” திரைப்படத்தின் கதை ஒரு சிறைச்சாலையை மையப்படுத்தி தான் அமைகிறது எனவும் இத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் வைத்திருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் பரவின.
இந்நிலையில் “தலைவர் 169” திரைப்படத்தின் போஸ்டர் இன்று காலை வெளியாகியது. அத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் வைத்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளம் “ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்கு முன் ஜி. வி. பிரகாஷ் நடித்த ஜெயில் திரைப்படம் பாருங்க” என விளம்பரப்படுத்தி உள்ளது. இதனை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Ippo #Jail paakalama @ahaTamil-la? Apurama Thalaivar’s #Jailer paakalam.. okay-va?😁
▶️ https://t.co/MNvmHzg8Ao#aha100PercentTamil #ahaThattunaTamilMattume pic.twitter.com/tohONSgRhA
— aha Tamil (@ahatamil) June 17, 2022
“விக்ரம்” திரைப்படம் வெளியான முந்தைய நாள் “கைதி” திரைப்படத்தை பார்த்துவிட்டு “விக்ரம்” திரைப்படத்திற்கு வாருங்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். தற்போது அதே பாணியை கையாண்டு “ஜெயில்” திரைப்படத்திற்கு விளம்பரப்படுத்தியுள்ளது நகைச்சுவையையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடித்த “ஜெயில்” திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை வசந்த பாலன் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் “ஆஹா தமிழ்” ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது.