CINEMA
“சம்பள பாக்கியை கொடுங்க…” விஷால் படக்குழுவினர் தூக்கிய போர் கொடி
சம்பள பாக்கியை இன்னும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என விஷால் படக்குழுவினர் தற்போது போர் கொடி தூக்கி உள்ளனர்.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது “லத்தி” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை வினோத் குமார் இயக்கி உள்ளார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் கூட விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் அதன் பின் சில நாட்களிலேயே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
தற்போது “லத்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஆனால் இப்பொழுது மேலும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது திரைப்படத்தில் பணியாற்றிய பலருக்கும் சம்பளம் சரியாக தரவில்லையாம். இவ்வாறு பலருக்கும் சம்பள பாக்கி இருப்பதால் தற்போது படக்குழுவில் வேலை பார்த்த டெக்னீசீயன்கள் போர் கொடி தூக்கி உள்ளனராம். ஆதலால் இத்திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“லத்தி” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான நந்தா, ரமணா ஆகியோரிடம் டெக்னீசீயன்கள் பலமுறை சம்பள பாக்கியை கேட்டும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். ஆதலால் எதாவது ஒரு முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என ஊழியர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். இதனால் விஷாலிடமே அவர்கள் சென்று முறையிட்டுள்ளார்களாம். நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் விஷால் இதற்கு நல்ல பதிலை கூறுவார் என எதிர்பார்க்கிறார்களாம்.
விஷால் சமீபத்தில் “ஆக்சன்”, “சக்ரா”, “எனிமி”, வீரமே வாகை சூடும்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “லத்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட “லத்தி” திரைப்படத்திற்காக ஜிம்மில் வெறித்தமாக வொர்க் அவுட் செய்து தனது உடலை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
