CINEMA
“விருமன்” திரைப்படத்தை இவர்களெல்லாம் பார்க்கக்கூடாது… ? ஏன் தெரியுமா?
கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படத்தை இவர்களெல்லாம் பார்க்கக்கூடாதாம். ஏன் தெரியுமா?
தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் “விருமன்”. இதில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார்.
“விருமன்” திரைப்படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் “குட்டிப் புலி”, “கொம்பன்”, “மருது”, “தேவராட்டம்”, “கொடி வீரன்”, “புலிக்குத்தி பாண்டி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவரது திரைப்படங்கள் அனைத்தும் கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதை போன்ற கதையம்சத்துடன் அமைந்திருக்கும்.
இவர் இயக்கிய “குட்டிப் புலி”, “கொம்பன்” ஆகிய திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆன திரைப்படங்கள். இதில் “கொம்பன்” திரைப்படத்திற்கு பிறகு தற்போது கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் முத்தையா.
“விருமன்” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். செல்வ குமார் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகிய இருவருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ், சிங்கம் புலி, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கஞ்சா பூவு கண்ணால” என்ற பாடல் வெளிவந்தது. இதில் கிராமத்து பெண்ணாக நேட்டிவிட்டியில் கலக்கி உள்ளார் அதிதி ஷங்கர். திரைப்படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “விருமன்” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “U/A” சான்றிதழ் அளித்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை 15 வயதுக்கு உட்பட்டடவர்கள் பார்க்க ஆலோசனை கிடையாது. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால் இத்திரைப்படத்திற்கு “U/A” சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என வியூகிக்கப்படுகிறது.
