CINEMA
மாஸ்டர் பிஜிஎம்மை காப்பி அடித்த யுவன்?? வைரல் வீடியோ
அனிரூத் இசையமைத்த “மாஸ்டர்” திரைப்படத்தின் பிஜிஎம்-ஐ யுவன் ஷங்கர் ராஜா காப்பியடித்து உள்ளது போல் ஒரு வீடியோ வலம் வருகிறது.
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான “விருமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகியோருடன் சூரி, பிரகாஷ் ராஜ், ஆர் கே சுரேஷ் என பலரும் நடித்துள்ளனர். தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இத்திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
“கொம்பன்” திரைப்படத்திற்கு பிறகு “விருமன்” திரைப்படத்தில் கார்த்தி-முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படம் ஒரு நல்ல குடும்பத் திரைப்படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது “விருமன்” திரைப்படத்தின் FDFS காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் திரையில் “விருமன்” டைட்டில் தென்படும் காட்சியை வீடியோ எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் ஷேர் செய்து “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய் இன்ட்ரோ ஆகும்போது வரும் இசை இது. இதனை காப்பி அடித்துள்ளார் யுவன் என கூறிவருகின்றனர்.
“மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய் அறிமுகம் ஆகும்போது விஜய் ஓடிச் சென்று பேருந்தில் ஏறுவது போல் ஒரு காட்சி வரும். அக்காட்சியில் பின்னணியில் இசைக்கும் பிஜிஎம்-ஐ அப்படியே யுவன் ஷங்கர் ராஜா காப்பியடித்துள்ளதாக கூறுகிறார்கள்.
“மாஸ்டர்” திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர் வெளியிட்ட இந்த வீடியோவால் இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த வீடியோ இதோ..
ராஜா டா யுவன் சங்கர் ராஜா @thisisysr Bgm King 👑#Viruman #VirumanFDFS pic.twitter.com/NyBSvKhx82
— VersatileStar™️ (@StarVersatile) August 12, 2022