Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ரஜினிக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. ஜெயிலர் அப்டேட்

CINEMA

ரஜினிக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. ஜெயிலர் அப்டேட்

“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

“பீஸ்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த நிலையில் இதில் திரைக்கதையை சற்று மேம்படுத்த நெல்சனுடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் குறித்த உண்மை தன்மை தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் விநாயகன் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விநாயகன் தமிழில் “திமிரு”, “சிலம்பாட்டம்”, “சிறுத்தை”, “மரியான்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் விநாயகன். “கம்மாட்டிபாடம்” என்ற திரைப்படத்தில் இவர் நடித்த “கங்கா” என்ற கதாப்பாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது. இந்த கதாப்பாத்திரத்திற்காக விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான “கேரள மாநில விருது” மற்றும் சிறந்த துணை நடிகருக்கான “ஃபிலிம் ஃபேர் விருது” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது விநாயகன், “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஜெயிலர்” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு மே அல்லது ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top