CINEMA
“விக்ரம் கமல் எஸ்கேப் ஆனது இங்க தான்”.. வைரல் ஆகும் வெற்றி தியேட்டர் புகைப்படம்
“விக்ரம்” திரைப்படத்தில் கமல் ஹாசன் தப்பித்து வெளியே வந்த வெற்றி திரையரங்கின் சுரங்க பாதை தற்போது செல்ஃபி ஸ்பாட் ஆகி உள்ளது.
“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகளவில் வெளியானது. “விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் 300 கோடியை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
இதனால் கமல் ஹாசனும் படக்குழுவினரும் குஷியாக இருக்கின்றனர். கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார். அதனை தொடர்ந்து உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசாக அளித்தார். அதனை தொடர்ந்து “ரோலக்ஸ்” கதாப்பத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு அன்பு பரிசாக “ரோலக்ஸ்” வாட்ச்சை பரிசாக வழங்கினார்.
“விக்ரம்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல் ஹாசனும் அவரது குழுவும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு சுரங்க பாதை வழியாக சென்னை வெற்றி தியேட்டரின் வழியே வெளியே வருவார்கள். அந்த காட்சி குறித்து ஒரு சமூக வலைத்தள ஊடகம் வெற்றித் திரையரங்கத்தின் உரிமையாளரிடம் எப்படி அந்த காட்சி எடுக்கப்பட்டது என்பது குறித்து பேட்டி எடுத்தது.
அதற்கு பதில் அளித்த அவர் “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் வந்து உங்கள் திரையரங்கத்தில் சுரங்க பாதை போல் எதாவது இருக்கிறதா? என கேட்டார். நான் அதற்கு எங்கள் திரையரங்கின் உள்ளேயே ஒன்று இருக்கிறது என கூறினேன். அதன் பிறகு நான் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தேன். விக்ரம் படம் வெளிவந்த பிறகு நிறைய பேர் என்னிடம் அந்த சுரங்க பாதை எங்கே போகிறது என கேட்கின்றனர், ஆனால் அவர்கள் நினைப்பது போல் அதில் ஒன்றுமே இல்லை” என பதில் கூறினார்.
இந்நிலையில் வெற்றி திரையரங்கில் கமல் ஹாசன் வெளிவந்த அந்த சுரங்க பாதை வழி தற்போது செல்ஃபி ஸ்பாட் ஆகியுள்ளது. “இது விக்ரம் தப்பித்த வழி” என எழுதி ஒட்டியிருக்கிறார்கள்.