Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” டிரைலர்; மாஸ் காட்டும் கமல்

CINEMA

புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” டிரைலர்; மாஸ் காட்டும் கமல்

‘விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பாகவுள்ளது.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

“விக்ரம்” திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் சார்பாக கமல் ஹாசனும், ஆர். மஹேந்திரனும் தயாரித்துள்ளனர். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் ஜூன் 1 ஆம் தேதியான இன்று இரவு 8.10 மணியளவில் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து பட்டையை கிளப்பியது. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“விக்ரம்” திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் தீயாக நடந்து கொண்டிருக்கின்றன. கமல் ஹாசன் இந்தியாவின் பல ஊர்களுக்கு சென்றும் பல நாடுகளுக்கு சென்றும் படத்தை புரோமோட் செய்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புரோமோஷனுக்காக சென்று வந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பத்தல” பத்தல”, “போர் கொண்ட சிங்கம்”, “Wasted” ஆகிய பாடல்களின் lyric  வீடியோக்களும் வெளிவந்துன.

இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெய்ட்டிங்கில் வெறியேற்றி காத்துக் கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் Booking தீயாக நடந்து வருகிறது. வருகிற ஜூன் 3 திரையரங்குகள் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

 

இந்நிலையில் துபாயில் இருக்கும் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top