CINEMA
புர்ஜ் கலிஃபாவில் வெளியான “விக்ரம்”… அரண்டு போன துபாய்
“விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பாகியுள்ளது.
“விக்ரம்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. கமல் ஹாசன் பல நாட்களாகவே “விக்ரம்” திரைப்படத்தை தீயாக புரோமோட் செய்து வருகிறார்.
இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு சென்றும் உலகின் பல நாடுகளுக்கு சென்றும் “விக்ரம்” திரைப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார். இந்நிலையில் இதன் உச்சக்கட்டமாக நேற்று துபாயில் அமைந்துள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ ஒளிபரப்பப்பட்டது.
புர்ஜ் கலிஃபாவின் பிரம்மாண்ட கட்டிடத்தில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ வெளியான போது அங்கே ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டனர். மேலும் அங்கே வெளியாகும்போது கமல் ஹாசன் ரசிகர்களிடையே பங்கேற்றார். “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ புர்ஜ் கலிஃபாவில் வெளியானது திரையுலைகினரை “ஓ” போட வைத்துள்ளது.
“விக்ரம்” திரைப்படம் நாளை கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்குகளிலும் Booking தாறு மாறாக நடைபெறுகிறது. இவ்வாறு நாளை திரையரங்கங்கள் திருவிழா கோலம் காணும் நிலையில் புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” புரோமோ வெளியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
““விக்ரம்” திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் சார்பாக கமல் ஹாசனும், ஆர். மஹேந்திரனும் தயாரித்துள்ளனர். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.
“விக்ரம்” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அநிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. மேலும் அனிருத்தின் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஆட்டம் போட வைத்துள்ளது. குறிப்பாக கமல் ஹாசன் தர லோக்கலாக இறங்கி குத்திய “பத்தல பத்தல” பாடல் வேற லெவலில் ரீச் ஆனது குறிப்பிடத்தக்கது.