CINEMA
விக்ரம் பிரபுவின் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான தெறி போஸ்டர்..
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெறித்தனமான அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.
“கும்கி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிய விக்ரம் பிரபு, அதன் பின் அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதளவில் வெற்றிக் காணவில்லை. “விக்ரம் பிரபு அவ்வளவுதான்” என்றும் “சிவாஜி பேரன் நிலைமையை பாரேன்” என்றும் பல பேச்சுக்கள் அடிப்பட்டன.
ஆனால் சமீபத்தில் வெளியான “டாணாக்காரன்” திரைப்படத்தின் மூலம் மாஸ் come back கொடுத்தார். காவலர் பயிற்சியில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் மனித தன்மையற்ற செயல்களையும் வெளிச்சம் போட்டு காட்டியது “டாணாக்காரன்”.
இதில் விக்ரம் பிரபு அவரது கதாப்பாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக நடித்திருப்பார். அவர் நடிப்பை பார்த்து திரையுலகமே “ஆ” என வாயை பிளந்தது. “விக்ரம் பிரபு நடிப்பில் புதிய பரிமாணம்” என பத்திரிக்கைகளில் பாராட்டுகள் குவிந்தன. மேலும் தமிழ்நாடு காவல் துறையே அத்திரைப்படத்தை பாராட்டிய நிகழ்வுகளும் நடந்தது.
“டாணாக்காரன்” திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்திற்கு “ரத்தமும் சதையும்” என்று பெயரிட்டுள்ளனர்.
போஸ்டர் படு பயங்கரமாகவும் மாஸாகவும் உள்ளது. போஸ்டர் முழுவதும் ரத்த நிறத்தில் மூழ்கியது போல் டிசைன் செய்திருக்கிறார்கள். அதனை கொண்டு திரைப்படம் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகும் ஆக்சன் திரைப்படமாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது.
விக்ரம் பிரபு இதனிடையே மணி ரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் “பார்த்திபேந்திர பல்லவா” என்ற கதாப்பாத்திரத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் பிரபுவும் வாணி போஜனும் கோடியாக நடித்து வரும் “பாயும் ஒளி நீ எனக்கு” திரைப்படமும் உருவாகி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.