CINEMA
கேன்ஸ் திரைப்பட விழாவில் “விக்ரம்”… கமலின் மாஸ் காட்டும் புகைப்படம்
“கேன்ஸ்” திரைப்பட விழாவில் கமல் “விக்ரம்” போஸ்டருடன் வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உருவான “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோக்கள் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிரைலரில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோரின் தோற்றங்களும் படு பயங்கரமாய் இருந்தது.
டிரைலரை பார்க்கும் போது ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கிறதாக ரசிகர்கள் உற்சாகத்தோடு இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திரைப்படத்திற்கு வெறித்தனமாக வெறி ஏற்றிக்கொண்டு வெயிட் செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு “விக்ரம்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் அவர்களை மேலும் வெறியேத்தியுள்ளது.
“விக்ரம்” திரைப்படம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் ரசிகர்கள் படத்திற்காக ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். மேலும் “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்ற தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெளியிட்டு விட்டார். அதில் இருந்து “விக்ரம்” டிரைலரை டிகோடிங் செய்து சூர்யா எங்கேயாவது தென்படுகிறாரா என்பதனை இணையவாசிகள் தேடிக் கொண்டிருந்தது தனிக்கதை.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்திய சினிமாவில் இருந்து தீபிகா படுகோன், மாதவன், இயக்குனர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், நவாசுத்தின் சித்திக் போன்ற பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் அவ்விழாவில் கமல்ஹாசனும் கலந்து கொண்டுள்ளார்.
அங்கே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட சிறப்பிதழ் ஒன்றின் அட்டைப்படத்தில் “விக்ரம்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அதனை கைகளில் வைத்தவாறு ஒரு மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vikram is in @vistaverseio and @ikamalhaasan is at Cannes and we are elated! ✨#KamalHaasanAtCannes#VistasAtCannes@abhay_VMC @PiiyushSingh @1209Saurabh @DhoopAshwini @mdf_cannes @Festival_Cannes @vistaverseio @Fanticoio @Diquerydigital @PlanetMOTT @GRfilmssg @FilmCompanion pic.twitter.com/eoSfghJvxv
— Vistas Media Capital (@VMC_sg) May 19, 2022