Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“உலக நாயகனே”….“Week days-லயும் தரமான கலெக்சன்”.. “விக்ரம்” வெறித்தனம்

CINEMA

“உலக நாயகனே”….“Week days-லயும் தரமான கலெக்சன்”.. “விக்ரம்” வெறித்தனம்

வேலை நாளான நேற்று திங்கட்கிழமையில் மட்டும் “விக்ரம்” திரைப்படம் எவ்வளவு அள்ளிருக்கு தெரியுமா?

“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டது. பல காலம் கழித்து கமல் ஹாசனுக்கு மாஸ் ஹிட் ஆக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.

ரசிகர்கள் ஆரவாரமாக “விக்ரம்” திரைப்படத்தை வரவேற்று வருகின்றனர். உலகம் எங்கும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே அதிகமாக வந்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வருடங்களாக கமல் ஹாசனுக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்பதால் “விக்ரம்” திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் கடந்த 4 நாட்களில் எவ்வளவு கலெக்சன் அள்ளியுள்ளது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 75 கோடிகளுக்கும் மேல் கலெக்சன் அள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலை நாளான நேற்று மட்டுமே ரூ.10 கோடிக்கும் மேல் கலெக்சன் அள்ளியுள்ளது.

 இதற்கு முன் இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் மட்டுமே 100 கோடி அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளிவரவதற்கு முன்பே “விக்ரம்” திரைப்படத்திற்கான புரோமோ வேலைகள் தீயாக நடந்தன. அதனால் Ticket booking படு பயங்கரமாக இருந்தது. ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏங்கி கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.

அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

 Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top