CINEMA
Leak ஆன “விக்ரம்” திரைப்படத்தின் கதை.. என்ன கதை தெரியுமா?
கமல் ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் வருகிற 3 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
“விக்ரம்” திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் சார்பாக கமல் ஹாசனும், ஆர். மஹேந்திரனும் தயாரித்துள்ளனர். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “காட்டில் ராஜாவாக இருந்த ஒரு சிங்கத்தை சர்க்கஸிற்கு அழைத்து சென்று பழக்குகிறார்கள். சர்க்கஸில் அச்சிங்கம் அதன் சாகசத்திற்காக ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி பழகி விட்டது.
அது வயதான பின் மீண்டும் காட்டிற்குள் விடப்பட்டு விடுகிறது. அத்தனை நாட்கள் சர்க்கஸில் இருந்ததால் அதற்கு வேட்டையாடுவது எப்படி என்றே மறந்துவிட்டது. அப்போது அங்கே உள்ள நரிகள் அந்த வயதான சிங்கத்தை தாக்க வருகின்றன. வேட்டையாடுவதை மறந்து போனாலும், சிங்கம் காட்டிற்கு ராஜா. தன்னை எதுவும் நெருங்க முடியாது என தெனாவட்டாக இருக்கிறது. இந்த கதையின் அடிப்படை தான் விக்ரம் திரைப்படம்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது “விக்ரம்” திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ஒரு முக்கியமான அரசு அதிகாரி ஒரு கும்பலால் கடத்தப் படுகிறார். அந்த அரசு அதிகாரியை தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு வருகிறது. அந்த போலீஸ் அதிகாரி அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் கதை.
இக்கதையும் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் பேசிய வயதான சிங்கத்தின் கதையும் ஓரளவு ஒத்துப்போவதாகவே தெரிகிறது. இந்த ஒன் லைன் கதையை பி வி ஆர் சினிமாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் காட்டு தீ போல் வைரல் ஆகி வருகிறது.
Vikram is about a retired police officer who goes on a mission to rescue an abducted government official.
Vikram releases at a PVR near you on June 3.#PVR #PVRCinemas #Vikram #LokeshKanagaraj #KamalHaasan #VijaySethupathi #FahadhFaasil #KalidasJayaram #Narain #AntonyVarghese pic.twitter.com/NzFUSGVPUG
— P V R C i n e m a s (@_PVRCinemas) May 30, 2022