CINEMA
Ticket Booking-ல் சாதனை படைத்த “விக்ரம்”.. மாஸ் காட்டும் கமல்..
“விக்ரம்” திரைப்படம் Ticket Booking-ல் இது வரை இல்லாத சாதனையை படைத்திருக்கிறது.
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று வெளியானது. ரசிகர்கள் 4 மணி காட்சிக்கே திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் 4 வருடங்கள் கழித்து கமல் ஹாசனின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
திரையரங்கினுள் பலரும் கமல் ஹாசன் திரையில் தோன்றும் போது அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்தில் பலரும் படம் பிளாக் பஸ்டர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் “சூர்யாவின் என்ட்ரி வேற லெவலில் உள்ளது” என்கிறார். மற்றொருவர் “செகண்ட் ஆஃப் தூள் பறக்குது” என பகிர்ந்துள்ளார். இன்னொருவர் “விக்ரம் masterpiece” என பகிர்ந்து மூன்று fire விட்டிருக்கிறார். மற்றொருவர் “ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விக்ரம் பிளாக் பஸ்டர்” என பாராட்டியுள்ளார். ஒருவர் “இந்த மாதிரி சூர்யா என்ட்ரிய நான் பார்த்தே இல்லை. வெறித்தனம் என பதிவிட்டுள்ளார். ஒருவர் “இது போன்ற ஒரு சினிமா எக்ஸ்பிரீயன்ஸை நான் இது வரையில் பார்த்ததே இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் விக்ரம் திரைப்படத்தை பார்க்கலாம்” என பாராட்டியுள்ளார்.
இவ்வாறு “விக்ரம்” திரைப்படத்திற்கு பல பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் Ticket Booking-ல் சாதனை படைத்துள்ளது.
அதாவது UAE-ல் 25,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இது ஒரு பெரும் சாதனை என கூறி வருகின்றனர்.
More than 25000 tickets sold for #Vikram’s advance book across the UAE.
We’re back with a Massive Opening!💥
Haven’t booked your tickets yet? Book now: https://t.co/xlNTK9UbaM#VikramFromJune3 #VikramFromTomorrow #VikramFDFS pic.twitter.com/jIAswlYqBG
— AP International (@APIfilms) June 2, 2022
