CINEMA
“விக்ரம்” படத்துக்கு விநோதமா பண்ண புரோமோஷன பாருங்க..
“விக்ரம்” திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் “விக்ரம்” திரைப்படத்திற்கு வித்தியாசமான புரோமோஷன் ஒன்றை செய்துள்ளார்கள்.
ஒரு படம் வெளியாகவிருக்கிறது என்றால் அதற்கான புரோமோஷன் வேலைகள் தீவீரமாக நடக்கும். மக்களை ஈர்ப்பதற்காக வித விதமான யோசனைகளில் புரோமோஷன் செய்வார்கள்.
கடந்த ஆண்டு சிகாகோவில் கமல்ஹாசன் கதர் ஆடைகளுக்காக பிரத்யேகமான “ஹவுஸ் ஆஃப் கதர்” என்ற கதர் ஆடை விநியோகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து “KH Memoir” என்ற பாரம்பரிய நறுமணங்கள் உடைய சென்ட் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
“விக்ரம்” திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் புரோமோஷன் பணிகள் முன்னணியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது “KH Memoir” நிறுவன சென்ட் பாட்டில்களில் “விக்ரம்” திரைப்படத்தின் போஸ்டரை அச்சிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உருவான “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோக்கள் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிரைலரில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோரின் தோற்றங்களும் படு பயங்கரமாய் இருந்தது.
டிரைலரை பார்க்கும் போது ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கிறதாக ரசிகர்கள் உற்சாகத்தோடு இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திரைப்படத்திற்கு வெறித்தனமாக வெறி ஏற்றிக்கொண்டு வெயிட் செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு “விக்ரம்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் அவர்களை மேலும் வெறியேத்தியுள்ளது.
“விக்ரம்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் தற்போது சென்ட் பாட்டிலில் “விக்ரம்” திரைப்படத்தின் போஸ்டரை அச்சிட்டு புரோமோட் செய்த செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
