CINEMA
“நாயகன் மீண்டும் வரார்”.. எட்டுத்திக்கும் பயம் தானே…
“விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தான ஒரு அப்டேட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
“விக்ரம்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடிக்கும் மேல் கல்லா கட்டி வருகிறது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக கமல் ஹாசன் தனது திரைப் பயணத்தில் முக்கிய வெற்றியாக “விக்ரம்” திரைப்படம் அமைந்திருப்பதால் மிகவும் குஷியாக இருக்கிறார். இயக்குனர், நடிகர் ஆகியோருக்கெல்லாம் பரிசுகளை அள்ளி வழங்கினார்.
“விக்ரம்” திரைப்படம் பல வருடங்கள் கழித்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷ்னல் நிறுவனத்திற்கு அதிக கலெக்சனை அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு முன் கமல் ஹாசன் தயாரித்த எந்த திரைப்படமும் இந்தளவு வெற்றி பெறவில்லை.
மேலும் கமல் தயாரிப்பதாக பல திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டது. “மருதநாயகம்” திரைப்படம் 10 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் பொருளாதார பலம் இல்லாமல் படப்பிடிப்பு நின்றது. அதே போல் “மர்மயோகி”, “சபாஷ் நாயுடு”, “தலைவன் இருக்கிறான்” என பல திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டன.
இந்த நிலையில் தான் “விக்ரம்” திரைப்படம் வெளிவந்து கல்லா கட்டி வருகிறது. “விக்ரம்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உரிமம் “ஹாட் ஸ்டார்” ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டது. மேலும் தமிழில் சேட்டலைட் உரிமத்தை “ஸ்டார் விஜய்” தொலைக்காட்சி கைப்பற்றியது. மேலும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார். இவ்வாறு கமல் ஹாசன் பிசினஸில் ஒரு பிடி பிடித்தார் என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் “விக்ரம்” திரைப்படம் எப்போது வெளிவரும்? என்பது குறித்தான ஒரு அப்டேட் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது “விக்ரம்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 8 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் மீண்டும் வரார்.. 🔥😎 #Vikram Streaming from July 8 on #DisneyplusHotstar #VikramOnDisneyplusHotstar @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Udhaystalin #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/QUey20zavP
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 29, 2022
