CINEMA
“விக்ரம்” படத்திற்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “Amul” நிறுவனம்..
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு “Amul” நிறுவனம் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
“விக்ரம்”திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டது. பல காலம் கழித்து கமல் ஹாசனுக்கு மாஸ் ஹிட் ஆக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
ரசிகர்கள் ஆரவாரமாக “விக்ரம்” திரைப்படத்தை வரவேற்று வருகின்றனர். உலகம் எங்கும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே அதிகமாக வந்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வருடங்களாக கமல் ஹாசனுக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்பதால் “விக்ரம்” திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பால் பொருட்களின் உற்பத்தி நிறுவனமான “Amul” நிறுவனம் சில நேரங்களுக்கு முன் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்காக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் கமல் ஹாசன் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போல் “Amul” நிறுவத்தின் தனித்துவமான அனிமேட் வரைப்படமாக ஒரு உருவம் வரையப்பட்டுள்ளது. அதன் மற்றொரு கையில் “Amul” வெண்ணெய் தடவிய ஒரு Bread இருக்கிறது.
மேலும் அதன் அருகில் வெண்ணெய் தடவிய பல Bread-கள் இருக்கின்றன. மேலும் அந்த போஸ்டரில் “VIKRAMUL!” என எழுதி இருக்கிறது. அதன் கீழே “MASSKA ENTERTAINER” என எழுதி உள்ளது. “Amul” நிறுவனம் அதிகாரப்பூரவமாக வெளியிட்ட இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“Amul” நிறுவனம் இந்தியாவின் முக்கியமான நிகழ்வுகள் எது நடந்தாலும், அது குறித்து ஒரு தனித்துவமான ஒரு அனிமேட் வரைப்படத்தை வரைந்து வெளியிடும். அந்த வகையில் தற்போது “விக்ரம்” திரைப்படத்தின் போஸ்ர்டரை “Amul” நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Amul Topical: Kamal Haasan excels in his comeback blockbuster! pic.twitter.com/AjEzll5nTk
— Amul.coop (@Amul_Coop) June 6, 2022
