CINEMA
கேரளாவையே கதிகலங்க வைத்த “விக்ரம்”.. தரமான சம்பவம்
கமல் ஹாசனின் வரலாற்றிலேயே “விக்ரம்” திரைப்படம் கேரளாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஓவர் டேக் செய்துள்ளது.
“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் ரூ. 340 கோடியை தாண்டியுள்ளது. கமல் ஹாசனின் திரை வாழ்க்கையிலேயே “விக்ரம்” திரைப்படம் முக்கிய வெற்றித் திரைப்படமாக அறியப்படுகிறது.
இதனிடையே “விக்ரம்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. அதில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், அன்புச் செழியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“கடந்த 10 வருடங்களில் என்னுடைய திரைப்படம் எளிதில் வெளியானதே இல்லை. எளிதில் வெளியிட விட மாட்டார்கள். “விக்ரம்” திரைப்படம் தான் எளிதில் வெளியாகி உள்ளது” என கூறியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் கேரளாவில் படு பயங்கரமாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த வருடம் வெளியான துல்கர் சல்மானின் “குரூப்” திரைப்படத்தின் வசூலை முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கேரளாவில் வெளி மாநில திரைப்படங்களில் “கே ஜி எஃப்” திரைப்படத்தை தொடர்ந்து “ கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் தான் வசூலில் சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கேரள சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கே கமல் Tough கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
