CINEMA
“விக்ரம்” படத்தின் இடைவேளையை இப்படி தான் எடுத்தாங்களா?? “ஓ” போட வைக்கும் மேக்கிங் வீடியோ
“விக்ரம்” திரைப்படத்தின் இடைவேளை காட்சியின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“விக்ரம்” திரைப்படத்தின் தொடக்கத்தில் கமல் ஹாசன் இறந்து விடுவது போலத் தான் காண்பிப்பார்கள். அதன் பிறகு ஃபகத் ஃபாசில் இது குறித்து விசாரணை நடித்திக் கொண்டிருப்பார்.
அதனிடையே பல கொலைகளை செய்யும் முகமுடி மாட்டிய கும்பல் ஒன்றை போலீஸார் துரத்துவார்கள். அப்போது அக்கூட்டத்தின் தலைவன் போல் இருக்கும் ஒருவர் பிடிபடுவார்.
அந்த முகமுடி போட்ட நபரை வில்லன் குரூப்பும் துறத்திக் கொண்டு வருவார்கள். அப்போது அங்கே ஒரு சண்டை காட்சி இடம் பெறும். அக்காட்சியை வியக்கத்தக்க வகையில் புது விதமான கேமரா ஆங்கில்களை கொண்டு ஒளிப்பதிவில் அசரவைத்திருப்பார்கள். அந்த இன்டர்வெல் காட்சி பெரும் Goosebumps ஆக இருக்கும்.
அக்காட்சி வந்த போது தியேட்டர்களில் விசில் பறந்தது. இந்நிலையில் அக்காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அக்காட்சியை மோகோபோட் என்ற தொழில்நுட்பக் கருவியை கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள். அந்த மேக்கிங் வீடியோவை பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஆகும்.
அந்த காட்சியை ஒரு கமல் ஹாசன் ரசிகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இதோ…
“விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு மாபெரும் வசூல் செய்த திரைப்படமாகவும் “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி “விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி கலெக்சனை தாண்டி வருகிறது. இதனால் ரசிகர்களும் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல் ஹாசனின் கேரியரிலேயே முக்கியமான மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். அதன் பின் இத்திரைப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் அப்பாச்சி பைக்குகளை பரிசளித்தார். அதோடு நிற்காமல் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிய சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை அன்பு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.