CINEMA
“விக்ரம்” திரைப்படத்தின் முதல் ரிவ்யூ… படம் தாறு மாறு..
வருகிற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “விக்ரம்” திரைப்படத்தின் முதல் ரிவ்யூ வெளிவந்துள்ளது.
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கமல் ஹாசன் இத்திரைப்படத்தை தயாரிக்க, ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து பட்டையை கிளப்பியது. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பத்தல பத்தல” பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து சக்கை போடு போட்டது. கமல் ஹாசன் குரலில் சும்மா தர லோக்கலாக இறங்கி குத்தியிருக்கிறார் என பலர் குதூகலத்தில் பாராட்டி வந்தனர்.
அதன் பின் சமீபத்தில் “போர் கொண்ட சிங்கம்” பாடல் வெளியாகி ரசிகர்களை உருக வைத்தது. அதில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் மகனை பற்றி தந்தை பாடும் விதமாக அமைந்தது.
அதன் பின் “Wasted” பாடலின் lyric வீடியோவும் வெளியாகி பட்டையை கிளப்பியது. இவ்வாறு பல அப்டேட்டுகளால் வெயிட்டிங்கில் வெறியேத்திக் கொண்டிருக்கும் வேளையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் “விக்ரம்” திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. இவர் வெளிநாட்டைச் சேர்ந்த சென்சார் போர்டு பணியாளர் என கூறப்படுகிறது.
அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதில் “கோலிவுட்டின் சிறந்த ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்திருக்கிறது விக்ரம் திரைப்படம். ஒரு High voltage Action Saga-வாக திரைப்படம் அமைந்துள்ளதுல். கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் வெறித்தனமாக நடித்திருக்கின்றனர்” என திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இச்செய்தி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
First Review of #Vikram from overseas Censor Board on my Insta Story. One of the Best Action Thriller ever made in Kollywood. #KamalHaasan is the Star of Show. ⭐⭐⭐1/2 Link for Review : https://t.co/At2cLl2T5v pic.twitter.com/6a4EJEsWNM
— Umair Sandhu (@UmairSandu) May 31, 2022