CINEMA
வெறித்தனம் ஓயாத விக்ரம்.. யப்பா! என்ன கலெக்சன்யா!!
“விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையிலும் வெறித்தனமாக கலெக்சன் அள்ளிக் கொண்டிருக்கிறது.
“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு கலெக்சனை அள்ளிக்கொண்டு வருகிறது. கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்களையும் ஓவர் டேக் செய்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக பல திரையரங்குகளில் இன்றும் “விக்ரம்” திரைப்படம் வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டும் அல்லாது பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
“விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மட்டும் எவ்வளவு கல்லா கட்டி இருக்கிறது தெரியுமா?
“விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாத காலம் நெருங்கியுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் சிறு நகரங்களில் கூட தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. அந்தளவுக்கு “விக்ரம்” திரைப்படம் மக்களை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் இதுவரை “விக்ரம்” திரைப்படம் அள்ளியுள்ள கலெக்சன் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டும் ரூ. 16 கோடியை நெருங்கி உள்ளதாம். இது கமல் திரைப்படங்களிலேயே மிக பெரிய சாதனையாக அறியப்படுகிறது.
இன்னும் பல நாட்கள் வெற்றிகரமாக “விக்ரம்” திரைப்படம் ஓடி கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
