CINEMA
“விக்ரம்” Adults Only திரைப்படமா? சென்சார் போர்டு கொடுத்த சர்டிஃபிகேட் என்ன தெரியுமா?
“விக்ரம்” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா?
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தின் டிரைலர் சென்ற வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் எக்ஸ்பெக்டேஷன் லெவல் எகிறியுள்ளது.
மேலும் சமீபத்தில் “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அவ்விழாவில் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித், சிம்பு, ராதிகா சரத்குமார் என திரைத் துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியாக கமல் ஹாசன் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது. அவர் பேசுகையில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். “ஓடிடி என்ற விநியோக தளம் வரும் என அன்றே சொன்னேன்” என அவர் கூறிய போது கரகோஷங்கள் விண்ணை பிளந்தன. மேலும் “ஹிந்தி ஒழிக என்று சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? தமிழ் வாழ்க என்று சொல்வோம்” என கூறியது ரசிகர்களை புல்லரிக்க செய்தது.
இதனிடையே விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “கமலை மிரட்டி திரைப்படத்தை வாங்கி விட்டீர்களா? என பலரும் கேட்கின்றனர். நான் அவரை மிரட்டவும் இல்லை, யாரும் கமல் ஹாசனை , மிரட்டவும் முடியாது. மிரட்டினால் பயப்படக்கூடிய ஆளும் அவர் இல்லை” என கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
மேலும் “விக்ரம்” திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்று தகவலும் சமீபத்தில் வெளிவந்தது. இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.