CINEMA
நான் ஸ்டாப்பாக வசூல் செய்து கொண்டிருக்கும் “விக்ரம்”.. தாறுமாறு கலெக்சன்??
“விக்ரம்” திரைப்படம் நான் ஸ்டாப்பாக கலெக்சனை அள்ளிக்கொண்டிருக்கிறது. இது வரை எவ்வளவு கோடி என தெரியுமா?
“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு கலெக்சனை அள்ளிக்கொண்டு வருகிறது. கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்களையும் ஓவர் டேக் செய்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக பல திரையரங்குகளில் இன்றும் “விக்ரம்” திரைப்படம் வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டும் அல்லாது பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
“விக்ரம்” திரைப்படம் மூலம் “LCU” , அதாவது “Lokesh Cinematic Universe” என்ற ஒரு புது வகையராவை அறிமுகப்படுத்தி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். “விக்ரம்” திரைப்படத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படத்தின் தொடர்ச்சியும் அதன் பின் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “கைதி” திரைப்படத்தின் தொடர்ச்சியும் வருவதால் இதனை அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் முந்தைய லோகேஷ் திரைப்படங்களின் தொடர்ச்சிகள் வந்தால் அதற்கு “LCU” என குறிக்கப்படும் என சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்தார்.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை தயாரிக்கும் “மார்வெல்” நிறுவனமும் இது போல் “MCU” (Marvel Cinematic Universe” என்ற வரிசையில் படங்களை வெளியிட்டு வந்தன. அதே போல் இங்கு “LCU” வரிசையில் பல திரைப்படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ. 370 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.