CINEMA
“இன்னமும் தீராத விக்ரம் மோகம்”… கொட்டும் மழையிலும் கொண்டாடும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ
“விக்ரம்” திரைப்படத்தை ஓபன் தியேட்டரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குதூகலத்தோடு கண்டுகழித்த காட்சி இணையத்தை கலக்கி வருகிறது.
‘விக்ரம்” திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியானது. தற்போது வரை இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.
கமல் திரைப்பட கேரியரிலேயே ‘விக்ரம்” திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. வெகு காலம் கழித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நன்றாக கல்லா கட்டியுள்ளது என்றே கூறலாம்.
“விக்ரம்” திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என அனைவரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர். குறிப்பாக ஏஜெண்ட் டினாவின் ஸ்டண்ட் காட்சிகள் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டு வருகின்றன.
திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்த சூர்யா, ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் வெறித்தனமாக பெர்ஃபார்மன்ஸ் செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளிக் கொண்டுப் போனார்.
“விக்ரம்” திரைப்படத்தின் இடைவேளை காட்சி ரசிகர்களை Goosebumps-ல் ஆழ்த்தியது. இறந்துவிட்டதாக காட்டப்பட்ட கமல் ஹாசன் திடீரென காட்சித் தந்தது வேற லெவல் காட்சியாக ரசிக்கப்பட்டது. மேலும் அந்த காட்சியில் தொழில்நுட்ப ரீதியாக உபயோகப்படுத்திய சிறப்பு கேமரா கோணங்கள் ரசிகர்களை “ஓ” போட வைத்தது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் இன்னும் அதன் மோகம் குறையவில்லை. ஆம்! சமீபத்தில் சென்னையில் ஒரு பிரபலமான கல்லூரியில் ஓப்பன் தியேட்டர் அமைத்து “விக்ரம்” திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. படம் ஒளிபரப்பின் இடையில் மழை பெய்ய தொடங்கியது. அப்படியும் பார்வையாளர்கள் யாரும் நகராமல் திரைப்படத்தை பார்த்தனர்.
அதில் இடைவேளை காட்சி வந்தபோது ரசிகர்கள் ஆரவாரமாக கத்தினர். இதனை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை பிரஷாந்த் என்ற கமல் ரசிகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இதோ…
