CINEMA
திருச்சியில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்… கெட் அப்லாம் பயங்கரமா இருக்கே!!
சீயான் விக்ரம் திருச்சியில் ரசிகர்களுக்கு காட்சி தந்து மாஸ் காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்தது. இதனை தொடர்ந்து “கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளிவருகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் “கே ஜி எஃப்” புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே எஸ் ரவிக்குமார் என பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் டிரைலர் வருகிற 25 ஆம் தேதி வெளிவருகிறது. “கோப்ரா” திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக “கோப்ரா” படக்குழுவினர் திருச்சிக்கு வந்துள்ளனர். சீயான் விக்ரம் திருச்சியில் உள்ள ரசிகர்களை சந்தித்தார். அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டியும் கலந்துகொண்டார்.
சீயான் விக்ரம் பா ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆதலால் அத்திரைப்படத்திற்காக கெட் அப் மாற்றியுள்ளார். இந்த நிலையில் அந்த மாஸ் கெட் அப்புடன் ரசிகர்களிடயே தோன்றினார் சீயான் விக்ரம். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
Actor @chiyaan and #Cobra team greeted cheerfully with unconditional love at #Trichy 🔥#CobraTrichy #CobraTour@AjayGnanamuthu @proyuvraaj @mugeshsharmaa @DeepuLK @7screenstudio #Chiyaan #Vikram pic.twitter.com/KSShLEojaP
— Chiyaan.Club (@ChiyaanClub) August 23, 2022
“கோப்ரா” திரைப்படத்தில் சீயான் விக்ரம் பல கெட் அப்களில் வருகிறார். சீயான் விக்ரம் இத்திரைப்படத்தில் ஒரு ஹை டெக் திருடனாக நடித்துள்ளார் என தெரியவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.