CINEMA
“நெஞ்சுல கைய வச்சிடவே கூடாது” பங்கமாய் கலாய்த்த சீயான்..
கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் மீடியாக்களை பங்கமாய் கலாய்த்துள்ளார் சீயான் விக்ரம்.
சீயான் விக்ரமிற்கு சமீபத்தில் Chest discomfort என்று கூறப்படும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு உடல் நலம் தேறி அடுத்த நாளே வீட்டிற்கு திரும்பினார்.
விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விஷயம் தெரிய வந்தபோது மீடியாக்கள் விக்ரமிற்கு மாரடைப்பு என்று செய்திகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து விக்ரமின் மேனேஜர் அவருக்கு லேசான நெஞ்சு வலி தான் எனவும் மாரடைப்பு என்று வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று “கோப்ரா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய விக்ரம் “நெஞ்சில் மட்டும் கை வைத்து விட கூடாது. உடனே ‘விக்ரமிற்கு ஹார்ட் அட்டாக் என உறுதி செய்யப்பட்டது’ என்று செய்தி போட்டு விடுவார்கள்” என்று நக்கலாக கூறினார்.
மேலும் பேசிய அவர் “20 வயதில் எனக்கு ஒரு ஆக்சிடன்ட் நடந்து கால் அகற்ற வேண்டிய சூழல் வந்தது. அதை எல்லாம் கடந்து வந்துவிட்டேன். இந்த சாதாரண நெஞ்சு வலி எல்லாம் என்னை எதுவும் செய்திட முடியாது” எனவும் கூறினார்.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
இத்திரைப்படத்தில் விக்ரம் பல கெட் அப்களில் வருகிறார். இதில் விகர்முடன் கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.