Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

எந்திரன் திரைப்படத்தை அலேக்காக தூக்கி சாப்பிட்ட “விக்ரம்”..

CINEMA

எந்திரன் திரைப்படத்தை அலேக்காக தூக்கி சாப்பிட்ட “விக்ரம்”..

ரஜினிகாந்த் நடித்த “எந்திரன்” மற்றும் “2.0” ஆகிய திரைப்படங்களை அலேக்காக தூக்கி சாப்பிட்டுள்ளது கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம்.

“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகளவில் வெளியானது. “விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது.

இதனால் கமல் ஹாசனும் படக்குழுவினரும் குஷியாக இருக்கின்றனர். கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார். அதனை தொடர்ந்து உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசாக அளித்தார். அதனை தொடர்ந்து “ரோலக்ஸ்” கதாப்பத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு அன்பு பரிசாக “ரோலக்ஸ்” வாட்ச்சை பரிசாக வழங்கினார்.

“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் மாஸ் ஹிட் ஆகி உள்ளது. அதாவது இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே வெகு விரைவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் கூட ஒரு தியேட்டர் உரிமையாளர் கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் “பாகுபலி 2” திரைப்படத்தை ஓரங்கட்டி உள்ளது என பதிவிட்டு இருந்தார். அதாவது ஒரு வாரத்திலேயே “பாகுபலி 2” திரைப்படத்தின் ரெகார்டை தகர்த்து கொண்டு “விக்ரம்” திரைப்படம் சென்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் வேற லெவல் கலெக்சனை அள்ளியுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ரூ. 300 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறதாக கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் யுனைட்டட் கிங்டம் என அழைக்கப்படும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட ஐயர்லாந்து ஆகிய நாடுகளில் “விக்ரம்” திரைப்படம் 700 ஆயிரம் பவுண்ட் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த “எந்திரன்” “2.0” ஆகிய திரைப்படங்கள் தான் இந்த சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இச்சாதனையை முறியடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top