CINEMA
வெயிட்டிங்கில் வெறியேத்தும் “விக்ரம்” ஆடியோ லாஞ்ச்..
இன்று “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.
கடந்த வாரம் “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, சூர்யா, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, என திரைத் துறையை சேர்ந்த முக்கிய நபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் புரோமோக்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. அனிரூத் மேடையில் இசையமைக்க “விக்ரம்” திரைப்பட பாடலை கமல் பாடுகிறார்.
மேலும் சிம்பு “பத்தல பத்தல” பாடலுக்கு கமல் போலவே நடனம் ஆடுகிறார். இவ்வாறு பல புரோமோக்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த வாரம் இணையத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோக்கள் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிரைலரில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோரின் தோற்றங்களும் படு பயங்கரமாய் இருந்தது.
இதனைத் தொடர்ந்து “விக்ரம்” திரைப்படம் என்பது இரண்டாம் பாகம் எனவும், “விக்ரம்” 3 ஆம் பாகமும் இருக்கிறது, அதற்கு Lead கொடுப்பதற்காகத் தான் ‘சூர்யா” வருகிறார் என கேன்ஸ் விழாவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் கமல். “விக்ரம்” திரைப்படம் 3 ஆம் பாகமும் வெளிவரவுள்ளது என்ற சஸ்பன்ஸை கமல் உடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.