CINEMA
நலமோடு வீடு திரும்பினார் விஜயகாந்த்…
விஜயகாந்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது நலமாக வீடு திரும்பி இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
கேப்டன் விஜயகாந்திற்கு பல காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை என்ற காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அவரது வலது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து தற்போது அவரது உடல் நலம் சரியாகி வீட்டிற்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் விஜயகாந்த் உடல் நலம் சீராகி பல்லாண்டு வாழ வேண்டும் என பலரும் இணையத்தில் கூறி வருகின்றனர்.
மருத்துவர்கள் விஜயகாந்த் என்னென்ன உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் எதை எதை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனராம்.
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 80களில் ரஜினி, கமல் ஆகியோர் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்டிருந்த போது சைலண்ட் கில்லராக மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தவர் விஜயகாந்த்.
தமிழின் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த விஜயகாந்த், கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் சூறாவளி போல் பயணித்தார். அதன் பலனாக 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்ந்து சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உருவெடுத்தது அவரது கட்சி.
இதனை தொடர்ந்து விஜயகாந்திற்கு உடல் நிலை சரியில்லாமால் போன காரணத்தால் அரசியலில் களத்தில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.