Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் கேப்டன் விஜயகாந்த்… சுவாரசியமான அப்டேட்

CINEMA

மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் கேப்டன் விஜயகாந்த்… சுவாரசியமான அப்டேட்

விஜயகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் சில அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளார்.

தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 80களில் ரஜினி, கமல் ஆகியோர் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்டிருந்த போது சைலண்ட் கில்லராக மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் “மழை பிடிக்காத மனிதன்” என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜய் மில்டன் “ மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜயகாந்த் இடம்பெறுவது உறுதி. ஆனால் அவருக்கு தற்போது உடல் நிலை சரியில்லை என்பதால் அவரது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஆனால் விஜயகாந்த் படத்தில் நடிப்பது உறுதி” என கூறியுள்ளார்.

விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், அம்மன் கோவில் கிழக்காலே, நூறாவது நாள், சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட்ராஜ், கண்ணுப் பட போகுதய்யா, வானத்தை போல, வாஞ்சிநாதன், வல்லரசு, ரமணா, எங்கள் அண்ணா  ஆகிய பல திரைப்படங்கள் வேற லெவலில் மாஸ் ஹிட் ஆன திரைப்படங்கள் ஆகும்.

குறிப்பாக விஜயகாந்த் நடித்த “வானத்தை போல” திரைப்படம் தற்போதும் 90’s kid-களின் விருப்பமான திரைப்படம்.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்த விஜயகாந்த், கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் சூறாவளி போல் பயணித்தார். அதன் பலனாக 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்ந்து சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உருவெடுத்தது அவரது கட்சி.

இதனை தொடர்ந்து விஜயகாந்திற்கு உடல் நிலை சரியில்லாமால் போன காரணத்தால் அரசியலில் களத்தில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top