Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

விஜய்-வெற்றி மாறன் கூட்டணியா? என்னப்பா சொல்றீங்க?

CINEMA

விஜய்-வெற்றி மாறன் கூட்டணியா? என்னப்பா சொல்றீங்க?

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சரத் குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

“தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு “தளபதி 66” திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். இவர் தெலுங்கில் பிரபலமான இயக்குனர். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்கள் ஒலிப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ, சிரிஷ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

“தளபதி 66” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் விஜய் இணைகிறார். “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்யுடன் இணையவுள்ள திரைப்படமும் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இணையத்தில் ஒரு ஆச்சரியத்தக்க தகவல் வலம் வருகிறது. அதாவது வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. வெற்றி மாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

“விடுதலை” திரைப்படம் முடிந்த பிறகு விஜய்யுடன் இணைய உள்ளாராம். அதே போல் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை தொடர்ந்து அதற்கு அடுத்த திரைப்படமாக தான் விஜய் வெற்றி மாறனுடன் இணைய உள்ளாராம். இவ்வாறு பல தகவல்கள் வலம் வருகின்றன. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து எதுவும் தெரியவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top