CINEMA
“விஜய் சேதுபதிக்கு கமல் என்ன கொடுத்தார் தெரியுமா?”…
விஜய் சேதுபதி கமல் ஹாசன் தனக்கு கொடுத்த பரிசை குறித்து பெருமையாக கூறியுள்ளார்.
“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் ரூ. 300 கோடியை தாண்டியுள்ளது. கமல் ஹாசனின் திரை வாழ்க்கையிலேயே “விக்ரம்” திரைப்படம் முக்கிய வெற்றித் திரைப்படமாக அறியப்படுகிறது.
இதனிடையே பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
இந்நிலையில் இன்று சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் “மாமனிதன்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
அதில் ஒரு நிருபர் “300 கோடியில் சந்தனம் (விஜய் சேதுபதி) கதாப்பாத்திரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் காரை பரிசாக கொடுத்தார், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் கொடுத்தார், சந்தனத்திற்கு என்ன கொடுத்தார்?” என கேட்டார்.
அதற்கு பொறுமையாக பதில் அளித்த விஜய் சேதுபதி “கமல் சாரோடு நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதுவே பெரிய விஷயம். எனக்கு இது மிகவும் பெரிய விஷயம். நான் வாழ்நாளில் இதனை கற்பனை கூட செய்ததில்லை” என பெருமையோடு கூறினார்.
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்கு சூர்யாவிற்கும், லோகேஷ் கனகராஜ்ஜிற்கு பரிசு அளித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதிக்கு பரிசளிக்கவில்லையே என பலர் பேசி வந்தனர். அதற்கெல்லாம் தற்போது விஜய் சேதுபதி இதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்
