CINEMA
புஷ்பா திரைப்படத்தில் விஜய் சேதுபதியா?? என்னப்பா சொல்றீங்க??
“புஷ்பா 2” திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக ஒரு தகவல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மைத் தன்மை என்ன என்பதை பார்க்கலாம்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது.
“புஷ்பா” திரைப்படம் வெளியான எல்லா மொழிகளிலும் மாஸ் ஹிட் ஆனது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “உ சொல்றியா”, “சாமி” ஆகிய பாடல்கள் இப்போதும் டாப் லெவல் டிரெண்டிங்கில் இருக்கிறது.
“உ சொல்றியா” பாடலில் சமந்தா ஆடிய ஐட்டம் டேன்ஸ் பார்வையாளர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதே போல் ராஷ்மிகா மந்தனா தனது பொன்னிற மேனியை காட்டு காட்டு என காட்டிய “சாமி” பாடலில் அவர் ஆடிய நடனம் வேற லெவல் ரீச் ஆனது.
இதனை தொடர்ந்து “புஷ்பா 2” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், அல்லு அர்ஜூன் ஆகிய இருவரை சுற்றியே திரைக்கதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கே ஜி எஃப் 2” திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு “புஷ்பா 2” திரைப்படத்தின் திரைக்கதையை சற்று பலப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வந்தன.
இதனிடையே விஜய் சேதுபதி “புஷ்பா 2” திரைப்படத்தில் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட ராஷ்மிகா மந்தனா இத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. ஆனால் ராஷ்மிகா மந்தனா நீக்கப்படவில்லை எனவும், அவரது பகுதிகளை மிகவும் குறைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
மேலும் கூடுதல் தகவலாக “புஷ்பா 2” திரைப்படத்தில் ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்க உள்ளதாகவும் அவருக்கு தான் திரைப்படத்தில் முக்கிய ரோல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.