CINEMA
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி… என்னப்பா சொல்றீங்க??
சிவகார்த்திகேயனுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பதாக ஒரு ஆச்சரியத்தக்க தகவல் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “டான்” திரைப்படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. காதல், காமெடி, சென்ட்டிமென்ட் என பக்கா கமெர்சியல் திரைப்படமாக “டான்” திரைப்படம் அமைந்தது.
இதனை தொடர்ந்து வருகிற தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை அனுதீப் கே வி இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகிறது.
இதனிடையே “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் “மாவீரன்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்தது.
ரசிகர்கள் பலர் சிவகார்த்திகேயன் பழைய திரைப்படங்களில் தென்படும் ரஜினிகாந்த் போல் இருக்கிறார் என கூறிவந்தனர். “மாவீரன்” டைட்டிலும் ஒரு பழைய ரஜினிகாந்த் திரைப்படத்தின் டைட்டில் தான்.
இந்நிலையில் “மாவீரன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என ஒரு சுவாரசியமான ஆச்சரியத்தக்க தகவல் வெளிவந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி ஒரு வேளை வில்லனாகவும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் சந்தனம் என்ற Drug Lord ஆக நடித்திருந்தார். இதனால் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு போட்டி நடிகர் என விஜய் சேதுபதியை கூறுவார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் அதனை ஒத்துக்கொண்டதில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தால் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,
