CINEMA
ஷாருக் கான் திரைப்படத்தில் விஜய்? போடு தகிட தகிட..
ஷாருக் கான் திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு தாறுமாறான தகவல் வெளிவந்துள்ளது.
ஷாருக் கான் தற்போது அட்லி இயக்கத்தில் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு என பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் இதற்கு முன் பிரபு தேவா பாலிவுட்டில் இயக்கிய “ரவுடி ரத்தோர்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் அக்சய் குமாருடன் நடமாடி இருப்பார். அதன் பிறகு தற்போது ஷாருக் கானுடன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தின் First look, Second look, Third look போஸ்டர்கள் கடந்த விஜய் பிறந்த நாளின் போது வெளியானது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைகிறார். இத்திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன் விஜய் இணைய உள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ஏற்கனவே “மாஸ்டர்” திரைப்படத்தை இயக்கி உள்ளார். அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படமும் மாஸ் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
