CINEMA
லோகேஷ் படத்துல விஜய் வில்லனா? என்னப்பா சொல்றீங்க?
லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படத்தில் விஜய் புது விதமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
விஜய் தற்போது நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் First Look, Second look, Third look போஸ்டர்கள் வெளிவந்து பட்டையை கிளப்பின. விஜய் பிறந்த நாளை ஒட்டி வெளிவந்த அந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக அமைந்தது.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதே போல் இவர்களுடன் ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு “வாரசுடு” என்று பெயர் வைத்திருக்கின்றனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவருகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைகிறார். லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் விஜய் கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது விஜய் ஒரு Full Fledge நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் விஜய் “அழகிய தமிழ் மகன்” படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு கெட் அப்களில் நடித்திருப்பார். ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் படம் முழுவதும் விஜய் நெகட்டிவ் ரோலில் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆகி உள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. இதனால் விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படமும் மாஸ் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.