Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“வாரிசு” திரைப்படத்தில் இடம்பெறப் போகும் அந்த பிரபலமான பாடல் என்ன தெரியுமா?

CINEMA

“வாரிசு” திரைப்படத்தில் இடம்பெறப் போகும் அந்த பிரபலமான பாடல் என்ன தெரியுமா?

“வாரிசு” திரைப்படத்தில் இடம்பெறப் போகிறது அந்த பிரபலமான பாலின் ரீமிக்ஸ். என்ன பாடல் தெரியுமா?

“வாரிசு” திரைப்படத்தின் First look, Second look மற்றும் Third look போஸ்டர்கள் கடந்த 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் மாஸாகவும் கிளாஸாகவும் விஜய் தோன்றினார்.

“வாரிசு” திரைப்படத்தில் விஜய் ஒரு பிசினஸ் மேனுக்கு மகனாக நடிக்கிறார் எனவும் தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது “வாரிசு” திரைப்படத்தின் பாடல் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய், சந்தியா, விவேக் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் “யூத்”. அத்திரைப்படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக “யூத்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆல் தோட்ட பூபதி” பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல். இப்பாடலுக்கு இசையமைத்தவர் மணிசர்மா. மேலும் இப்பாடலை பாடியவர் ஷங்கர் மகாதேவன்.

இந்நிலையில் “வாரிசு” திரைப்படத்தில் “ஆல் தோட்ட பூபதி பாடல்” இடம்பெற இருக்கிறதாம். ஆம்! அதாவது “ஆல் தோட்ட பூபதி” பாடலை இசையமைப்பாளர் தமன் Remaster செய்து இப்படத்தில் இடம்பெற வைக்க உள்ளாராம்.

“யூத்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆல் தோட்ட பூபதி” பாடலில் விஜய்யுடன் சிம்ரன் குத்தட்டாம் போட்டிருப்பார். இந்நிலையில் “வாரிசு” திரைப்படத்தில் இடம்பெறப் போகும் பாடலில் சிம்ரன் மீண்டும் இணைவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top