CINEMA
“விஜய் ஒரு நாளாவது வீட்டுக்கு வரனும்”.. கண் கலங்கிய எஸ். ஏ. சி…
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை பற்றி பேசும்போது அவர் கண் கலங்கிய செய்தி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் தமிழின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். விஜய்யை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாது விஜய்யை கதாநாயகனாக வைத்து ஆரம்ப காலத்தில் பல திரைப்படங்களை இயக்கினார்.
சமீபத்தில் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் வெளிவந்தபோது பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அப்படம் ஏமாற்றத்தை தந்தது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சென்ற ரசிகர்களின் முகங்கள் வாடிப்போனதை பார்த்திருப்போம். “நெல்சன் சொதப்பிட்டார்” “விஜய் ஏன் இப்படி ஒரே மாதிரியே” போன்ற விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து திரைப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக சில தகவல்கள் வந்தன. ஆனால் பெரும்பான்மையான விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை தான் கொடுத்ததாக அறியப்படுகிறது. மேலும் “பீஸ்ட்”க்கு போட்டியாக களம் இறங்கிய “கே. ஜி. எஃப். சேப்டர் 2” பல்வேறு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. திரையரங்குகள் திருவிழா போல் காணப்பட்டன.
இதனிடையே “பீஸ்ட்” திரைப்படம் குறித்து எஸ். ஏ. சந்திரசேகர் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் “இப்போதெல்லாம் இயக்குனர்கள் முதல் படத்தை நல்ல கதையம்சத்தோடு உருவாக்குகிறார்கள், ஆனால் அவர்கள் பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்கும்போது பெரிய நடிகர் தானே, இவர்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள், ஆதலால் இரண்டு சண்டைக்காட்சிகள் அல்லது இரண்டு பாடல்கள் வைத்துவிட்டால் போதும் படம் ஓடிவிடும் என நினைத்துக் கொள்கிறார்கள். பீஸ்ட் திரைப்படம் என்னை பெரிதும் ஏமாற்றிவிட்டது “ என கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் “நடிகர் விஜய் இந்த விஷயத்தை எனக்காக நிறைவேற்ற வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது எது?” என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த எஸ். ஏ. சந்திரசேகர் “விஜய் மாதத்திற்கு ஒருமுறையாவது வீட்டிற்கு வரவேண்டும். எங்களை நலம் விசாரிக்க வேண்டும்” என கூறி கண்ணீர் சிந்தினார். இச்சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
