CINEMA
“விஜய் என்ன செஞ்சாலும் குத்தம் தான்”… ரசிகர்களின் குமுறலை பாருங்க…
நடிகர் விஜய் என்ன செய்தாலும் குற்றம் தான் சொல்வார்கள் என விஜய் ரசிகர்கள் தங்களது ஆறாத வடுவால் காயப்பட்டு எழுதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே பெரும்பான்மையாக வந்தன. மேலும் தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்களின் முகங்கள் நொந்து போய் இருந்தன.
மேலும் வெளியான 30 நாட்களுக்குள்ளேயே “பீஸ்ட்” திரைப்படம் ஓடிடியில் வெளிவந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தங்களது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக தயாரித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்போஸ்டரில் “ இவர் எதாவது அவார்டு வாங்குனா: அது சாதாரண அவார்டு என்பார்கள், இவர் எதாவது உதவி செஞ்சா: பப்ளிசிட்டிக்காக என்பார்கள், மக்களுக்காக எதாவது குரல் கொடுத்தால் அரசியல் ஆசை என்பார்கள், எதுவும் மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருந்தால் கோடியில் புரளும் நடிகன் வாயை திறக்காமல் இருக்கிறார் என்பார்கள், படம் நல்லா இருந்தா: இது எங்க மதத்திற்கு எதிராக பண்ணுகிறார், டைரக்டர் காபி லாஜிக் இல்லாத படம், இப்படி என்ன பண்ணாலும் , அவரை குறை சொல்றதுன்னே ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இப்போஸ்டர் “ராயல் கிங்க்ஸ் விஜய்” ரசிகர்மன்ற உறுப்பினர்களால் எழுதப்பட்டுள்ளது.
விஜய் நடித்த “துப்பாக்கி” திரைப்படம் வந்தபோது “ஆது இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்” என எதிர்ப்பு வந்தது. “சர்க்கார்” திரைப்படம் வந்தபோது அத்திரைப்படத்தின் கதை மற்றொருவர் உடையது என சர்ச்சைகள் கிளம்பின. இவ்வாறு பல பிரச்சனைகளை கடந்து தான் இத்திரைப்படங்கள் வெளியானது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் ரசிகர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதாக அமைந்த இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.