CINEMA
“இது சட்டையா? இல்ல இது தான் சட்டையா”? விஜய் தேவரகொண்டாவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்
விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த வித்தியாசமான சட்டையை கம்மென்ட் அடித்து நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான “லைகர்” திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி பேன் இந்திய திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் “லைகர்” திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் கம்மென்ட்டுகளே அளித்து வந்தனர். திரைக்கதையில் சொதப்பியதால் ரசிகர்களுக்கு பெரும் சோதனையாக இத்திரைப்படம் அமைந்தது.
மேலும் சம்பந்தமே இல்லாத இடத்தில் இடம்பெற்ற பாடல்கள் பார்வையாளர்களை “உச்” கொட்ட வைத்தது. வணிக ரீதியாகவே இத்திரைப்படம் பெரும் சரிவையே கண்டுள்ளது.
இத்திரைப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பிற்கு இணங்க முதல் நாளில் உலகளவில் ரூ. 33 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் அதனை தொடர்ந்து வந்த நாட்களில் பெரும் சரிவை கண்டது.
“லைகர்” திரைப்படத்திற்கு மக்களிடையே பெருவாரியான எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும் அந்த பிரம்மாண்ட புரோமோஷன் பணிகள் கைக்கொடுக்கவில்லை.
குறிப்பாக இத்திரைப்படத்தில் மைக் டைசன் நடித்திருந்தார். ஆனால் அவருக்கான பங்கு மிகவும் குறைவாக இருந்தது. மேலும் அவரின் கதாப்பாத்திரத்தை சரியாக பயன்படுத்தவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே விஜய் தேவரகொண்டா தனது ரசிகர் ஒருவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த வித்தியாசமான மேற்சட்டை இணையத்தில் வைரல் ஆனது. பலரும் அவர் அணிந்திருந்த சட்டையை கலாய்த்து தள்ளினர்.
With #Liger pic.twitter.com/gLgWlWqRp7
— Mohan Kumar (@ursmohan_kumar) August 25, 2022
எனினும் அந்த சட்டை தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது. அந்த சட்டை கிரெக் லாரன் என்ற பிராண்டை சேர்ந்தது என அறியப்படுகிறது. ஒரு சட்டை சுமார் ரூ. 70,000 என கூறப்படுகிறது.
