CINEMA
ரிலையன்ஸுடன் புதிய தொழிலை தொடங்கும் தளபதி விஜய்..??
நடிகர் விஜய் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்து ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளதாக ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பு தொழிலையும் தாண்டி சென்னையில் சில திருமண மண்டபங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். சாலி கிராமத்தில் ஷோபனா திருமண மண்டபம், வடபழனி ஆகிய பல இடங்களில் சொந்தமாக மண்டபங்கள் வைத்திருக்கிறார்.
மேலும் புதுக்கோட்டையிலும் கூட விஜய்க்கு சொந்தமாக ஒரு திருமண மண்டபம் இருக்கிறது. இவ்வாறு சொந்தமாக பல திருமண மண்டபங்கள் வைத்திருக்கும் விஜய் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்க்க உள்ளதாக ஒரு தகவல் வருகிறது.
அதாவது விஜய், தான் சொந்தமாக வைத்திருக்கும் திருமண மண்டபங்களில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கான முடிவில் இருப்பதாக சில பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்போகிறார் எனவும் கூறப்படுகிறது.
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைய உள்ளார். “மாஸ்டர்” திரைப்படத்திற்கு பின் விஜய் லோகேஷுடன் இணையும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
