CINEMA
திடீரென விக்னேஷ் சிவன் வெளியிட்ட யாரும் பார்க்காத புகைப்படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
விக்னேஷ் சிவன் திடீரென ஆச்சரியத்தக்க விதமாக யாரும் பார்க்காத சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் தனியார் ரிசார்ட்டில் வைத்து நடைபெற்றது. இத்திருமண விழாவில் ஷாருக் கான், அட்லி, சூர்யா, ஜோதிகா, ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, மணி ரத்னம், விஜய் சேதுபதி, அனிரூத் என பலரும் கலந்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் இவர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால் அப்புகைப்படங்களை திருமணம் ஆகி இத்தனை நாட்கள் ஆகியும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தற்போது இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் விஜய் சேதுபதியின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா, அட்லி, ஷாருக் கான், அனிரூத் ஆகியோருடனும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து சூர்யா-ஜோதிகாவுடன் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதே போல் நயன்தாரா அன்போடு ஷாருக் கானை கட்டி அணைத்தவாறு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் ரஜினிகாந்த், மணி ரத்னம் ஆகியோருடனும் விக்ணேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நயன்தாரா தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கும் ஷாருக் கான் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் மலையாளத்தில் பிரேமம் இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் “கோல்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
