CINEMA
வெளியானது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ??
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் திருமண வீடியோவின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.
நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிரூத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண வைபவ வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. சமீப நாட்களாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் நயன்தாராவை கைவிட்டு விட்டது எனவும், நெட்ஃப்ளிக்ஸில் நயன்-விக்கி திருமணம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து நயன்-விக்கி திருமண வைபவம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெப் சீரீஸ் போல் சீசன்களாக வெளிவர உள்ளதாக அறிவிப்பு வந்தது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷி ஆகினர்.
பல நாட்களாக நயன்-விக்கி திருமண வைபவத்தின் வீடியோ குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நயன்-விக்கி திருமண வைபவ வீடியோவின் முன்னோட்டம் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களை குறித்து கூறுகின்றனர். இருவரும் காதல் ஜோடிகள் போல் வலம் வருகின்றனர். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. விரைவில் இவர்களின் திருமண வைபவ வீடியோ வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முன்னோட்ட வீடியோ இதோ…
Cue the malems cos we’re ready to dance in excitement💃
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
நயன்தாரா தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விக்னேஷ் சிவன் அஜித் குமாரை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
