Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விடுதலை” திரைப்படத்தின் பரபரப்பான ஷூட்டிங்க் ஸ்பாட் புகைப்படங்கள்..

CINEMA

“விடுதலை” திரைப்படத்தின் பரபரப்பான ஷூட்டிங்க் ஸ்பாட் புகைப்படங்கள்..

விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” சிறுகதையை தழுவி எழுத்தப்பட்டதாகும். ஒரு பொதுவுடைமைவாத போராளிக்கும் காவலருக்குமான உரையாடலே இச்சிறுகதையின் மையப்பகுதி. ஆனால் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஏற்ப பல சுவாரசியங்களை இணைத்து திரைக்கதையை எழுதியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் சூரி ஒரு பாவப்பட்ட போலீஸ் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி டெரர் லுக்கில் மாஸ் காட்டுகிறார்.

அதே போல் வெற்றி மாறன் பரபரப்பாக திரைப்படத்தை இயக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்புகைப்படங்கள் ரசிகர்களின் எக்ஸ்பெக்டேசனை எகிறவைத்துள்ளது.

விடுதலை” திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஆர். வேல்ராஜ் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top