CINEMA
“மீண்டும் தொடங்கியது வெற்றிமாறன் படம்”.. எப்போ ரிலீஸாகுது தெரியுமா?
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படதில் முதல் முறையாக சூரி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். வெற்றி மாறன் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். வேல்ராஜ் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட எகிறியதே காரணம் என கூறப்படுகிறது. வெறும் 60 சதவிகிதமே இத்திரைப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்ததாம். பட்ஜெட் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாம். இந்நிலையில் இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத்திரைப்படம் இவ்வருடத்தின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் பொதுவுடைமைவாத போராளியின் வாழ்க்கையை கூறும் திரைப்படமாக அமைகிறது என கூறப்படுகிறது. ஒரு போலீஸுக்கும் பொதுவுடைமைவாதிக்கும் நடக்கும் உரையாடலாகவே ஜெயமோகன் “துணைவன்” சிறுகதையை எழுதியிருப்பார்.
“விடுதலை” அச்சிறுகதையை தழுவி எடுப்பதால் இத்திரைப்படத்தின் கதைக்கருவும் அதை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போலீஸ் என்கவுண்டர்களை எதிர்த்து இத்திரைப்படம் ஒரு முக்கிய கருத்தை கூறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தின் படபிடிப்பு வேகம் எடுப்பதாகவும் மேலும் இவ்வாண்டு இறுதிக்குள் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டிருப்பதால் படக்குழுவினர் தீயாக வேலை செய்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.