CINEMA
வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் ரோல் என்ன தெரியுமா?
வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சென்ற ஆண்டு வெளிவந்த “மாநாடு” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழுக்கு மிகவும் புதிதான Time Loop கான்செப்ட்டை மையமாக கொண்டு திரைக்கதையில் அதிரி புதிரியாக வெங்கட் பிரபு விளையாடி இருப்பார்.
சிம்பு, வெங்கட் பிரபு ஆகிய இருவருக்குமே “மாநாடு” திரைப்படம் ஏறுமுகமாக அமைந்தது. குறிப்பாக வெங்கட் பிரபுவுக்கு “மங்காத்தா” திரைப்படத்திற்கு பிறகு “மாநாடு” திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது அத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ரோல் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறாராம். சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் மீண்டும் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.
“டான்” திரைப்படத்தை தொடர்ந்து அனுதீப் கே. வி. இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. அதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். அத்திரைப்படத்தை கமல் ஹாசனும் சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறார்கள். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
அதனை தொடர்ந்து “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோனே அஸ்வினுடன் இணைய உள்ளார். இத்திரைப்படங்களை தொடர்ந்து தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
