CINEMA
வெளிவந்தது வெந்து தணிந்தது காடு டிராக் லிஸ்ட்…
சிம்பு நடிப்பில் உருவான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் டிராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது.
சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருகிற 15 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.
இதில் இடம்பெற்ற “காலத்துக்கும் நீ வேண்டும்”, “மறக்குமா நெஞ்சம்” ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இன்று “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தற்போது “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து பாடல்களையும் கவிஞர் தாமரை தான் எழுதியுள்ளார்.
இனி என்னென்ன பாடல்கள் என்பதை பார்ப்போம்..
- Muthu’s Journey
- மறக்குமா நெஞ்சம்
- மல்லிப்பூ
- உன்ன நெனச்சதும்
- காலத்துக்கும் நீ வேண்டும்…
Here’s the Amazing Track List of @SilambarasanTR_ @menongautham ‘s #VendhuThanindhathuKaadu ! yet another remarkable work by @arrahman & team
Prod by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release@Udhaystalin#VTKAudioLaunch #VTKTrailer pic.twitter.com/7N7p9Npngx— Vels Film International (@VelsFilmIntl) September 2, 2022
இதுவே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் பட்டியல். இன்று மாலை இத்திரைப்படத்தின் பாடல்களும் டிரைலரும் வெளியாக உள்ளது.
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்புவுடன் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு மாறுபட்ட தோற்றத்துடன் கிராமத்தில் இருந்து கூலிக்காக மும்பைக்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியவருகிறது.
இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “ஐந்து நெருப்புகள்” என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.